February 12, 2021

மின்சார பால்வண்டி (Milk Delivery E Bike)

பழைய உலக அழகு எப்போதும் எவரும் மங்க விரும்புவதில்லை. இன்றைய உலகத்திலும் மிதிவண்டி ஒரு ஏக்கத்தைத் தூண்டவே செய்கிறது. சுற்றுச்சூழல் அலை உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மின் மிதிவண்டிகள் வரவேற்கத்தக்க மறுபிரவேசம் செய்கின்றன. E- பைக்கின் தோற்றம் நீண்டதூர பயணிகளுக்கு செலவு குறைவான ஒரு தீர்வாக அமைகிறது.சண்டிகார் (Chandigarh) நகரத்தை சேர்ந்த 24 வயதான திரு. சுபன்கோயல் தன் (Shubam Goyal) கல்லூரி நண்பர் 23 வயதான திரு.அனிக்கெட் பரத்வாஜ் (Mr.Aniket Bhardwaj) உடன் இணைந்து துவங்கியுள்ள தொடக்க நிறுவனம் "ஜட் ஆட்டோமோட்டிவ்" (Zadd Automotive) இரண்டு வகையான மின் மிதிவண்டிகளை அறிமுகம் செய்து சந்தைப்படுத்தி வருகிறது. இவைகள் விஷயங்களின் இணைய
மாகவும் (Internet of Things) , செயற்கை நுண்ணறிவு கொண்ட வையாகவும் (Artificial Intelligence) தனிப்பட்ட விற்பனைப் புள்ளி (Unique Selling Point) தொடர்பு கொண்டவையாகவும் உள்ளன.

"யுட்டினிட்டி மினி" (Utility Mini)

"ஜட் X 1 (Zadd x 1 )

ஆகிய இரண்டு வகையான மின் மிதிவண்டிகளின் (E + Byke) சிறப்புகள்:

1. அடக்கமான (Compact Sized) சிறிய வாகனம்.

2. எளிதில் மாற்றக்கூடிய இரண்டு பேட்டரிகள் கொண்டவை.

3. இரண்டு மணி நேரத்தில் முழுமையான மின்னேற்றம்
(Charge) செய்ய முடியும்.

4. முழுமையாக மின்னேற்றம் செய்த வாகனம் தொடர்ந்து
120 கீ.மீ வரை செல்லக் கூடியது.

5. வீட்டு மின்சாரத்திலேயோ அலுவலக மின்சாரத்திலேயோ  மின்னேற்றம் செய்து கொள்ள முடியும்.

6. ஓட்டுனரின் உயரத்திற்கு ஏற்ற படி கைப்பிடிகளை திருத்தி அமைத்துக் கொள்ள
(Adjustable) முடியும்.

7. சராசரியாக 4.5 அடிமுதல் 7 அடி உயரம் உள்ளவர்கள் சுலபமாக இயக்க இயலும்.

8. ஓட்டுனரின் எடை தவிர்த்து 80 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல இயலும்.

9. பின்பகுதியில் பொருள் வைக்கும் கூடையும் முன்பகுதியில் பைவைக்க
(Pannier Bags) இடமும் கொண்டது.

10. வாகனத்தில் உள்ள செயலி
(App) ஒவ்வொரு முறை பயன்பாட்டுக்கு பிறகு வாகனத்தின் நிலை (Condition of the bike) அறிவுக்கும் வசதி உள்ளது.

11. வாகனத்துடன் GPS இணைக்கப்பட்டுள்ளது.

12. ஒரு பேட்டரி வாகனத்தின் விலை ரூ 40,000/- இரண்டு பேட்டரி வாகனத்தின் விலை
ரூ. 50,000-/-

தற்சமயம் E- பைக்குள் லூதியானா (Ludhiana) வில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை ஹரியானாவிலும் நடைபெறுகிறது. வாகனத்திற்கான டீலர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் பின்லாந்து,நார்வே, தாய்லாந்து, இந்தோனேசியா, ஐரோப்பா, மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ளனர்.Zadd - E பைக்குகள் தற்சமயம் இந்தியாவில் மும்பை, பெங்களூரு, சண்டிகார், டில்லி, மற்றும் அகமதாபாத் நகரங்களில் வலம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Zadd Automotive

Addressplot no 16, Sector 22, Budanpur, Panchkula, Haryana 134109
 
Hours
 
 
Stories