பழக்கழிவுகள், சமையலறைக் கழிவுகள், விலங்குகள் மற்றும் மனிதக்கழிவுகளை பயன்படுத்தி கோழிகள் மற்றும் மீன்களுக்குத் தேவையான அடர் புரதம் கொண்ட உணவாக பிளாக் சோல்ஜர் பிளையின் லார்வாக்கள் உற்பத்தி செய்யும் முறை உலக அளவில் பல நாடுகளில் கடைபிடிக்கப் படுகின்றது. இந்தியாவிலும் பல இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கால்பிரிவு என்ற கிராமத்தில் தனது 15 சென்ட் நிலத்தில் திரு.சுந்தரேஸ்வரன் பல்முனை பண்ணை விவசாயத்துடன் பிளாக் சோல்ஜர் ப்ளை புழுக்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்து தனது பண்ணை கோழிகள் மற்றும் மீன் பண்ணைக்கு உணவாக அளித்து வருகிறார். தனது 15 சென்ட் நிலத்தில் மியாவாக்கியின் அடர் நடவு முறைப்படி பழச் செடிகள், மூலிகைச் செடிகள் மற்றும் 60 வகை மரங்களை வளர்ப்பதுடன் கழிவுகளை பயன்படுத்தி பயோ கேஸ் எரிபொருள் உற்பத்தி செய்கிறார். நல்லதொரு பன்னாட்டு நிறுவனத்தில் விவசாய ஆலோசகராக பணியாற்றிவந்த திரு.கந்தரேஸ்வரன் 2016 -2017லிருந்து ஒருங்கிணைந்த பண்ணையுடன் BSFL உற்பத்தியும் அதுபற்றிய பயிற்சி நிலையமும் நடத்துகிறார்.
Video link:
https://youtu.be/0RvyPXzgL8k
BSFL வளர்ப்பு முறை :
1. "லவ் கேஜ்" என்ற BSF ஈக்கள் இனவிருத்தி செய்யும் அறை.
2. "எக்வுட்" என்ற முட்டைகள் இடும் இடம்.
3. முட்டையிலிருந்து வரும் லார்வா எனும் புழுக்கள் வளர்க்கும் இடம்.
4. "லார்வா" எனும் புழுக்கள் வளர்த்து எடுத்த பின்னர் ஃபிராஸ் (FRASS) எனும் கழிவுகள் விவசாயத்திற்கான எருவாக பயன்படுத்தல்.
என்று நான்கு படிகளாக (4 Steps) செயல்படுத்தப்படுகிறது.
BSFL புழுக்களை உற்பத்தி செய்ய 25 செண்டிகிரேட் வெப்பமும் 70% to 80% ஈரப்பதமும் மிகவும் உகந்தது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 5 கிலோ வரையில் BSFL கோழிகளுக்கும் மீன்களுக்கும் உணவாக அளித்து உணவு விலையில் 30% to 40% சேமிக்க முடிகிறது என்று திரு. மகேஸ்வரன் கூறுகிறார். BSFL - புழுக்களின் புரதம் 18 வகையான அமினோ அமிலங்கள் (Amino Acids) கொண்ட 45% புரதம் கொண்டது.
முதலீடுகள்:
1. 200 கோழிகள் அளவு பண்ணைக்கு ரூ 50,000 முதலீட்டில் BSFL உற்பத்தி நிலையம் போதுமானது.
2. சிறிது பெரிய அளவிலான BSFL உற்பத்தி நிலையத்தினை ரூ20 லட்சத்தில் நிர்மாணிக்க லாம்.
3. மிகப்பெரிய அளவிலான BSFL உற்பத்தி நிலைத்திணை ரூ 2 கோடியில் நிர்மாணிக்கலாம். இத்தகைய உற்பத்தி நிலையங்கள் பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் உள்ளன.
அனைத்து விதமான உற்பத்தி நிலையங்களின் நிர்மாணச் செலவினை 3 லிருந்து 4 ஆண்டுகளில் சமன்படுத்த முடியும் (Break Even) என்பது குறிப்பிடத்தக்கது.