January 16, 2021

லட்சங்கள் தரும் நெல் உமி (Lakhs from paddy Husk)

தேடல்களும் போட்டிகளிலுமே பல புதிய வாய்ப்புகள் உருவாக காரணமாகின்றது. அப்படியான ஒரு தேடலில் ஒடிஷாவின் கலஹண்டியைச் சேர்த்த அரிசி வியாபாரி திரு. பிபு சாஹீ (Mr.Bhibhu Sahu) 2019- ஆண்டில் மட்டும் நெல் உமிவிற்பனையில் ரூ 20 லட்சம் ஈட்டியுள்ளார்.

ஒரு பள்ளி ஆசிரயரானதிரு பிபு 2007 - ல் தனது ஆசிறி பணியினை விடுத்து நெல் மற்றும் அரிசி வணிகத்தில் ஈடுபட்டார். தனது சொந்தமான அரிசி - ஆலையில் (Rice Mill) தினமும் சேகரமாகும் நெல் உமியை (Paddy Husk) கழிவு செய்யும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் விளைவாக பல டன் நெல் உமியினை வெறுமென எரித்து சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு வழி முறைக்கு முயற்சி மேற்கொண்டு உலகம் முழுவதும் உள்ள இரும்பு தொழிற்சாலைகளை குறிப்பாக பிரான்ச, ஜெர்மெனி, இத்தாலி, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தைவான், இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஈ மெயில் மூலம் தொடர்பு கொண்டார். முதன்முதலாக சவுதி அரேபியாவின் தேவைக்காக 100 டன் நெல் உமி குச்சிகள் (Rice Husk Pellets) அனுப்பப்பட்டது. 2019-ல் அனுப்பப்பட்ட நெல் உமி குச்சிகள் மூலம் மட்டுமே ரூ 20 லட்சம் ஈட்டியுள்ளார் திரு.பிபு.

"ஹரிபிரியா அக்ரோ இண்டஸ்டிரீஸ்" (Hari Priya Agro Industries) என்ற அவருடைய நவீன அரிசி ஆலையில் (Modern Rice Mill) மட்டும் ஒரு நாளைக்கு 3 டன் நெல் உமி (Paddy Husk) சேகரம் ஆகின்றது. ஒடிஷாவில் கலாஹண்டியில் மட்டுமே ஒரு நாளைக்கு 100 டன் நெல் உமி சேகரம் ஆகிறது என்பது விவசாயிகளுக்கு பொருளீட்டும் நல்லதொரு வணிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் ஆசிரியர், வணிகர், விவசாயி திரு. பிபு சாஹீ (Mr. Bhibhu Sahu) அவர்களின் உமிக் குச்சிகள் (Paddy Husk Pellets) கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் விவசாயிகள் வருமானம் பெற வழி வகுத்துள்ளது பாராட்டத்தக்கது.

HARIPRIYA AGRO INDUSTRIES

Mr. Bibhu Prasad Sahu
At - Paiksadhel, NH 59, Po - Turchi, Madanpur Rampur, Kalahandi, Odisha, India - 766102
+91-7978806218, +91-9438181818
hpaiexport@gmail.com
http://www.haripriyaagroindustries.com
https://www.exportersindia.com/haripriya-agro-industries/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories