திரு. சுதாகர் திருமதி. நவ்ஷத்யா (Mr. Sudakar Mrs. Naushadya) இணையர் தற்போது தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர். அங்கு அவர்கள் இயற்கை மூலப் பொருட்கள் சேற்று மண்ணிலிருந்து தயாரித்து வெயிலில் உலர்த்தி தயாரிக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு தங்களுடைய பண்ணைக்கு மத்தியில் ஒரு சுற்றுச் சூழல் நட்பு நிலையான வீட்டினை கட்டியுள்ளனர்.
2018- ஆண்டு வரையில் மும்பை மற்றும் தஞ்சாவூரில் பிறந்த இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு கூட்டு நிதி (Crowd Funding) பெறுநிறுவனத்தில் பணியாற்றி நகரவாசிகளாகவே இருந்தனர். இருவரும் எளிய வாழ்க்கை முறைக்கான நுழைவாயிலாக பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் உள்ள ஒரு தன்னார்வ ஆர்கானிக் பண்ணையில் பயிரிடுதல் களையெடுத்தல், அறுவடை மற்றும் செயலாக்கத்துடன், தயாரிப்புகள் எவ்வாறு மதிப்புக் கூட்டல் செய்யப்படுகின்றன என்பது பற்றிய முதல் அறிவை இருவரும் பெற்றனர். மேலும் இது ஒரு பண்ணைக்கு செல்வது மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு முழு வாழ்க்கை முறையை எவ்வாறு உருவாகிறது என்பது பற்றியும் அவர்கள் அறிந்தனர்.
இன்று சுதாகரும்-நவ்ஷத்யாவும் தமிழ்நாட்டில் 11.5 ஏக்கர் அமைதியான நிலப்பரப்பிற்கு மத்தியில் சொந்தமாக ஒரு பண்ணையும் ஒரு இயற்கை வீட்டில் பூஜ்ஜிய கழிவு நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறார்கள்.
வீடு:
சாத்தியமான எல்லா வழிகளிலும் கார்பன் தடம் குறைக்கும் வகையில் வீட்டின் முழு அமைப்பையும் மண், மாட்டுச்சாணம், சுட்ட களிமண்கற்கள், சுண்ணாம்புக் கலவை, பழைய கழிவு ஜன்னல்கள் (Second Hand), டெர்ர கோட்டா ஓடுகள், சுண்ணாம்பு பால் பூச்சுகள் கொண்டு அமைக்கப்பட்டன.
வீட்டின் சமயலறை மற்றும் இதர பகுதிகளில் அடோப் செங்கற்கள் (Adobe Brics) என்று சொல்லக்கூடிய வெயிலில் உலர வைத்த செங்கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் வெளிப்புறம் உரம் தயாரிக்கும் கழிவறையை கட்டியுள்ளனர். "மெட்ராஸ் டெரேஸ்" (Madras Terrace) எனப்படும் தென்னிந்திய தரை நுட்பத்தால் செய்யப்பட்ட மொட்டைமாடி எரித்த செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பினால் ஆனதால் கோடைகாலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கிறது.
முழு கட்டிடமும் காப் கட்டுமான முறையால் (Cob Method of Construction) அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறைக்கு மூலப்பொருட்கள் அருகிலுள்ள நிலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் முதலீட்டின் பெரும்பகுதி சேமிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல்: இந்த நிலம் வனவிலங்கு காப்பகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சுமார் 40 தென்னை மரங்கள் கொண்ட தோப்பாகும் பல பழ மரங்களும் நடப்பட்டுள்ளன. மேலும் வாழை இஞ்சி மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளன சில பகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறை நெல் மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன.
பண்ணையில் 10 நாட்டு மாடுகள், பலவகையான கோழிகள் வளர்க்கப்பட்டு பால் முட்டை அனைத்தும் அங்கேயே விற்பனை செய்யப்படுகின்றன.
தேங்காய்கள் அப்படியேயும் குளிர்ந்த அழுத்த முறையில் (ColdPress Method) எண்ணை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை வேலியைச்சுற்றி பனை மரங்கள் வளர்க்கப்பட்டு கரிம பனை வெல்லம் உற்பத்தியும் விற்பனையும் நடைபெறுகிறது.
பெரு நிறுவனத்தின் பிடியில் சிக்கி இயந்திரத்தனமான நகர வாழ்க்கையினை தவிர்த்து ஒரு எளிய வாழ்க்கை முறையில் வாழ ஒரு சிலருக்கு மட்டுமே அமைகிறது. பெரும்பாலானோருக்கு இது ஒரு கனவாகவே இருந்து வருகிறது என்பது யதார்த்தம்.
Facebook Page: https://www.facebook.com/vivasayeeslife
https://instagram.com/
- DR. வி.எஸ்.பொய்யாமொழி (MVSc)
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.