August 08, 2020

20 ஆண்டுகளுக்கு விலையில்லா மின்சாரம்

கேரளாவைச் சேர்ந்த சகோதரர்கள் அருண் ஜார்ஜ், அனூப் ஜார்ஜ் இருவரும் இணைந்து மிகக் குறைந்த விலையில் சாதாரண நிலையில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் காற்றின் வேகத்தால் இயங்கும் இயந்திரம் (Turbine) கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் இயற்கை சக்தி மின்சார சக்தியாக மாற்றி பயன்படுத்த முடியும். காற்றினால் இயக்கப்படும் இந்த இயந்திரம் கிட்டத்தட்ட நாம் வீட்டில் பயன்படுத்தும் சீலிங் பேன் (Ceiling Fan) அளவிலேயே உள்ளதால் இதனை நிர்மாணிப்பது மிகவும் எளிதாகிறது. இந்த சிறிய வகை காற்று இயந்திரம் (Turbine) அவதார் (Avatar) என்ற பெயரில் “அவந்த் கார்டி இன்னோவேஷன்” (Avant Garde Innovation) என்ற நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

 

அவதார் - 1 - இயந்திரம் அமைப்பு

- மொத்த எடை 75 கிலோ

- மோட்டாரின் இறக்கைகள் விட்டம் 10 அடி

- காற்றாடி பிளேடின் எண்ணிக்கை 3

- மின் உற்பத்தி வோல்டேஜ் 24/48 V 230 V

- அதிகபட்ச உற்பத்தி - 1000 W வரை

- 1.4 m/s காற்று வேகத்திலேயே இயங்கக்கூடியது

- தினமும் காற்று வேகம் 5.5 m/s  ல் 5 kWh மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

- மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரம் (Generator) பல் சக்கரம் (Gear) இல்லாதது, புருசு (Brush) இல்லாதது மற்றும் நீயோடைமியம் காந்தத்தால் (Neodymium Magnets) அதிகபட்ச மின் உற்பத்தி உறுதி செய்யப்பட்டுள்ளது

- தானாகவே காற்று நோக்கி திரும்பி நிறுத்தப்படுகிறது. (Auto Furling Tail)

- 2 - ஆண்டு வாரண்ட்டி அளிக்கப்படுகிறது

- 20 ஆண்டுகள் உழைக்க வல்லது.

- விலை ரூ 50,000 மட்டுமே.

காற்று இயந்திரத்தின் சிறப்புகள்:

1. முழுவதுமாகவோ, பகுதி அளவிலோ பயன்பாட்டுக்கு ஏற்ப செலவு குறைகிறது அல்லது செலவுகள் முழுவதுமாக தவிர்க்கப்படுகிறது.

2 அவதார் 1 இயந்திரம் 6 மீட்டரிலிருந்து 20 மீட்டர் உயரம் வரையில் நிர்மாணித்தல் போதுமானது. பொதுவாக உயரமாக அமைத்தால் அதிக காற்று வேகம் அதிக மின் உற்பத்தி கிடைக்கும்.

3. வீட்டு மாடிகளிலோ, தரையிலிருந்தோ இயந்திர கோபுரத்தை அமைக்கலாம்.

4. அரசு மின்சார வட்டத்திலோ (TANGEDCO GRID) அல்லது தனியான பயன்பாட்டிலோ நிர்மாணம் செய்து கொள்ளலாம்.

5. இயந்திரம் இயங்குவதால் சத்தமோ அதிர்வோ கிடையாது என்பதால் வீட்டு மாடியில் அமைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

6. சுலபமாக பிரித்து வேறு இடங்களுக்கு எடுத்தும் செல்ல முடியும்.

7. தேவைக்கு தகுந்தார்போல் 12V 150 Ah பேட்டரிகள் ஒன்று முதல் 4 வரையில் போதுமானது.

8. சாதாரணமாக 6 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் தரவல்லது.

9. 165 - லி குளிர்சாதனப் பெட்டி, 2 மடிக்கணினிகள், 4 - காற்றாடிகள், 4 – பல்புகள், தொலைக்காட்சி அனைத்தும் 6 மணி நேரம்வரை தொடர்ந்து இயக்க வல்லது.

10. எரிபொருள் செலவு இல்லை.

11. மாசு ஏற்படுவதில்லை எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பானது.

12. மிகக் குறைந்த இயக்கு, பராமரிப்பு செலவுகள். (Operational & Maintenance).

13. இயந்திரத்தின் இறக்கைகள் (Blades) தெளிவாக தெரியும்படி வண்ணம் தீட்டப்பட்டு இருப்பதால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது இல்லை.

14. குறைந்தபட்ச காற்று வீச்சு இருந்தாலே 24 மணி நேரமும் மின் உற்பத்தி சாத்தியம். இரவோ, மழையோ, வெயிலோ உற்பத்தியை பாதிப்பதில்லை.

15. வீட்டு உபயோகத்திற்கு மட்டும் அல்லாமல் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும்.

I6. நிர்மாணிப்பதற்கு எந்தவிதமான அரசு அனுமதியும் (License) தேவையில்லை.

17. அரசு மின்சார சுற்றில் (GRID) இனைத்தால் மட்டும் அரசு அனுமதி தேவை.

18. Rs.50,000/- விலையில் கொடுக்கப்படும் காற்றாலையில் மின்கலங்கள் (Batteries) தவிர அனைத்து இயந்திர பொருட்களும் உள்ளன.

இயற்கை காற்று சக்தியை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மின் உற்பத்தி செய்து பயன்படுவதால் தனிப்பட்டவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்பதில் நிச்சயமாக மாற்று கருத்து இருக்க முடியாது.

Call: +91 9995099488

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories