வீடுகளுக்கும் பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் பொது நிறுவனங்களுக்கும் நம்பகமான மின்சார விநியோகம் கிடைத்தவுடன், அது சரியான மற்றும் புத்திசாலித்தனமான முறையில் நுகரப்படுவதையும் வீணாக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். இத்தகைய பயன்பாட்டு நடைமுறை மூலம் 40 சதவீதம் மின் கட்டணத்தை சேமிக்க முடியும் என்பதை IIT கரக்பூர் பட்டதாரிகளான பிரனேஷ் சவுத்ரி மற்றும் சுஷாந்த் ஜாக்சன் ஆகியோர் தங்களது நவீன கண்டுபிடிப்புகள் மூலம் நிறுபித்துள்ளனர்.
இவர்களது 2016 -ம் ஆண்டில் ஜூன் பல்ஸ் (Zun Pulse) என்ற துவக்க நிறுவனம் அவர்களது கண்டுபிடிப்பில் ஸ்மார்ட் எனர்ஜி கண்காணிப்பு மற்றும் ஸ்மார்ட் மின்சார சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த வரிசையில் பல தயாரிப்புகள் இருந்தாலும் மின் கட்டணத்தை சேமிக்க IOT (Internet of Things) மெஷின் தரவுகளைப் பயன்படுத்தி செயல்படும் மூன்று ஸ்மார்ட் உபகரணங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
அவற்றில் சில:-
ஸ்மார்ட் பல்புகள்
ஸ்மார்ட் ஃபேன்கள்
ஸ்மார்ட் பிளக்குகள்
பிற தயாரிப்புகள்:-
- ஸ்மார்ட் டவுன்விளக்குகள்
- ஸ்மார்ட் ஸ்டிரிப் விளக்குகள்
- மனநிலை விளக்குகள்
- தொலை தூரத்தில் ஆன் மற்றும் ஆஃப் செய்யும் சுவிட்சுகள்
- பல வகையான ஸ்மார்ட் பிளக்குகள்
- ஸ்மார்ட் ரிமோட்டுகள்
- ஏர் கண்டிஷனர், மற்றும்
கீசர்களை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய ரிமோட் சுவிட்ச் அமைப்புகள்.
- பழைய உபகரணங்களை ஸ்மார்டாக மாற்றுவதற்கான வழிமுறை செயல்பாடுகள்
- A.c கள் மற்றும் தண்ணீர்
கீசர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு இயக்க திட்டமிடலாம். அதற்கான உபகரணங்கள்
- ஸ்மார்ட் பிரஷ்லெஸ் DC (BLDC) ஃபேன் பிரஷ் இல்லாத டிசி மோட்டரை பயன்படுத்துவதால் வழக்கமான மின்விசிறிகளை விட 40% குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகிறது.
- ஸ்டார்ட் டோர்பெல் (Door Bell)
- ஸ்டார்ட் கேமரா
- ஸ்டார்ட் பூட்டுகள்
- ஸ்டார்ட் பாதுகாப்பு சென்சார்கள் ஆகியவை அடக்கம்
- இவை தவிர ஸ்மார்ட் ஏர் சுத்திகரிப்பான்கள் (Air Purifier)
- ஸ்மார்ட் தண்ணீர் சுத்திகரிப்பான்கள் (Water Purifier)
ஒரு இந்திய குடும்பம் மின்சேமிப்பை அடைய ஸ்மார்ட் எனர்ஜி மானிட்டரில் துவக்கி சாத்தியப்படுத்தலாம்.
இவர்களது மற்றுமொரு நிறுவனம் ஜூன்ரூஃப் (Zan Roof) சோலார் சிஸ்டம்களையும் ஸ்மார்ட் ஆற்றல் தீர்வுகளை வழங்குகிறது இவை அனைத்து இயக்கங்களுக்கும் வழக்கமான Wi - FI இணைய இணைப்பு தேவைப்படுகிறது.
இந்தியச் சூழலில் விரல் நுனியில் ஆற்றல் சேமிப்பு என்பது மிக முக்கியமான வகையாகும் இவை அனைத்தும் ரூ. 10,000 ஒருமுறை செலவில் சாத்தியமாகிறது என்பது கூடுதல் தகவல்.
Our Website:
Our offices Corporate Office Delhi NCR - 6th Floor, Paras Trinity, Sector 63, Gurgaon, Haryana 122011
Contact: 7827711518
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.