August 23, 2020

மழைநீர், சூரிய ஒளி மின்சாரம், மாடித்தோட்ட காய்கறிகள் பெறும் ஒரு தன்னிரைவு வீடு

"நீரின்றமையாதுலகு" என்ற படி நீர் உலகெங்கும் நிறைந்த பஞ்சபூதங்களுளொன்று, மனிதன், விலங்குகள், தாவரங்கள் நீரின்றி சிறிது காலமும் உயிர் வாழ்தல் அரிது.

தமிழ்மறை வள்ளலாகிய பொய்யா மொழியாரும் மழை
பெய்யவில்லையேல் இப்பெரிய உலகத்தில் பசி நிலை பெற்று மக்களை பெரிதும் வருத்தும் என்னும் பொருள்பட.

"விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்

துண்ணின் றுடற்றும் பசி"

இதனை முழுவதுமாக ஏற்றுள்ள வேலுரைச் சேர்ந்த
சூழலியல் போராளி டாக்டர். கந்தசாமி சுப்பிரமணி அவர்கள் நிலத்தடியில் மழைநீர் சேகரிப்புத்தொட்டி, வானத்தை நோக்கிய சூரிய ஒளி, மின் உற்பத்தி, மற்றும் மாடியில் தோட்டம் நிர்மாணித்து அசத்தியுள்ளார்.

வேலூரில் உள்ள கிரித்தவ மருத்துவக்கல்லூரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு (Intensive Care Unit) டாக்டரான கந்தசாமி சுப்பிரமணி தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளை சந்தித்த பின் அதற்கான தீர்வாக தனது கார் பார்க்கிங்கிற்கு கீழே சுமார் 60,000 லிட்டர் நீர் கொள்ளும் அளவிற்கு ஒரு தொட்டியினைக் நிர்மாணித்து
நான்கு வருடமாக மழைநீரை சேகரித்து பயன்படுத்தி வருகிறார்.

மழைநீர் சேகரிப்பு தொட்டியில் இரண்டடுக்கு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் முதல் அடுக்கில் கரித்துண்டுகள், சரளை கற்களும் இரண்டாவது அடுக்கில் சரளை கற்களும் ஆற்று மணலும் கொட்டி அமைத்துள்ளார். இயற்கையான முறையில் வடிகட்டப்பட்ட நன்னீரை வீட்டின் அனைத்து தேவைகளுக்கும் கழிவரை நீர் தேவை தவிர பயன்படுத்துகிறார்.

இந்த நீரையே Ro மூலம் மேலும் சுத்திகரித்து குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்துகிறார். சற்றேரத்தாழ ஒன்பது மாதங்களுக்கு மழைநீர் போதுமானதாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. மழை நீர் தொட்டியில் சூரிய ஒளி படாத படியா பாசிகள் படிவதில்லை என்பது கூடுதல் அனுகூலம்.

வானம்பார்த்த 5 kw சூரிய ஒளி மின்சாரத்தினால் வீட்டின் அனைத்து மின்சாரத் தேவைகளும் பூர்த்தியாகிறது.
மின்சார பில் இல்லை!

வீட்டுத் தேவைக்கான பெரும்பாலான காய்கறிகள் மாடித்தோட்டத்தில் இருந்து!

நீர், மின்சாரம், காய்கறிகள் என்று அனைத்தும் பெற்று தன்னிறைவு பெற்ற இல்ல மாகவே உள்ளது டாக்டர். கந்தசாமி சுப்பிரமணி அவர்கள் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரின் முக்கியத்துவம் பற்றிய சில தகவல்கள்:

இயற்கையின் கொடையான எண்ணைக்கு அடுத்தபடியாக நீர் இன்று மிகப்பெரிய வர்த்தகப் பொருளாக மாறி வருகிறது. நீருக்குத் தனி கடவுளை கொண்டிருக்கும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

தண்ணீருக்கான போராட்டம் இவ்வாறு இருக்கையில் தமிழர்கள் நீரின் வகைகள் மற்றும் அதன் குணங்களை எவ்வாறு வகுத்துள்ளார்கள் என்பதை " நோயில்லா நெறி மற்றும் பதார்த்த சிந்தாமணி" எனும் சித்தமருத்துவ ஏடுகளில் காணலாம்.

சுருக்கமாக:

நீரின் வகைகள்:

- சுத்த நீர் குணம்

- நில இயல்பில்லாத நீர் குணம்

- பனிநீர் குணம்

- ஆலங்கட்டி நீர் குணம்

- நில இயல்புள்ள நீர் குணம்

- ஊற்றுநீர் குணம்

- துரவு நீர்குண்ணம்

- பிள்ளைக் கிணறு நீர் குணம்

- நடை பாவு நீரின் குணம் ஆற்று நீரான

- கங்கை நீரின் குணம்

- யமுனை நீரின உன் குணம்

- துங்கபத்திரை நீரின் குணம்

- நர்மதை நீரின் குணம்

- சிந்து நீரின் குணம்

- கோதாவரி நீரின் குணம்

- காவேரி நீரின் குணம்

- வைகை நீரின் குணம்

- தாமிரவருணி நீரின் குணம்

- சித்திரை நீரின் குணம்

- பச்சையாறு நீரின் குணம்

- குளத்து நீரின் குணம்

- ஏரி நீரின் குணம்

- ஓடை நீரின் குணம்

- சுனை நீரின் குணம்

- பாறை நீரின் குணம்

- சுக்கான் நீரின் குணம்

- கரும்பாறை நீரின் குணம்

- அருவி நீரின் குணம்

- அடவி நீரின் குணம்

- கருத்த நீரின் குணம்

- சிவந்த நீரின் குணம்

- வயல் நீரின் குணம்

- நண்டு குழி நீரின் குணம்

அனைத்து நீரின் குணங்களும் தனித்தனியாக கவிதை நடையில் கூறப்பட்டுள்ளது

Sample க்கு காவிரி நீரின் குணம்!

"காவிரிநீ ராற்பொரு
மல்காசசுவா சஞ்சோபை
நீவு தொண்டை கட்டிளைப்பு நீரேற்றம் பூவுலகில்
மன்னுதிரக் கட்டியொடு வாயுவர எவன்பவைபோம்
பின்னுடற்குக் காந்தியுமாம் பேசு"

அதாவது

காவிரி நீரானது, வயிற்று உப்புசம், இருமல், இரைப்பு, உடல் வீக்கம், கபக்கட்டு, ஆயாசம், சலதோவிம், இரத்த குன்மம், நாவறட்சி முதியவற்றை தொலைக்கும்.

அழகை உண்டாக்கும்!!

மழை நீர் சேகரிப்போம்!!

இயற்கை வளம் காப்போம்!!

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories