April 07, 2021

இரட்டிப்பு லாபம் தரும் சோலார் பேனல் (Agrivoltaics)

உலகின் இரண்டாவது பெரிய அளவிலான விளை நிலங்கள்
(கிட்டத்தட்ட 395 மில்லியன் ஏக்கர்), உலகின் மிகப்பெரிய நீர் பாசன பயிர் நிலங்கள் (கிட்டதட்ட 216 மில்லியன் ஏக்கர்) மற்றும் இந்திய மக்கள் தொகையில் 58% விவசாயத்தை சார்ந்து இருப்பதால் இந்திய வேளாண் வளங்களின் மையமாக இருக்கிறது. அந்த வகையில் பண்ணை வருமானத்தை இரட்டிப்பாக்க பலவகையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



இத்தகைய முயற்சியில் "இரட்டை பயன்பாட்டு சூரிய நிறுவல்கள்" (Duel use Solar Installation) ஒரு சிறந்த பயன்பாடாக அமைந்துள்ளது. "அக்ரி வோல்டாயிக்ஸ்" (Agrivoltaics) எனப்படும் சோலார் தகடுகள் நிறுவல்கள் தொழில்நுட்பம் சிறந்த வரவேற்பினை பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் சூரிய சக்தியின் மூலமாக மின்சார சக்தி உற்பத்தி செய்வது மற்றும் பயிர்களை வளர்ப்பது என்ற எண்ணம் சிறிது காலமாக இருந்து வருகிறது. தற்போது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் "அகிரி வோல்டாயிக்ஸ்" (Agrivoltaics) என்ற இரட்டை பயன்பாட்டு சூரிய ஒளி நிறுவல்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன உலக அளவில் சிறு மற்றும் குறு விவசாயிகள் மீதான பொருளாதார அழுத்தங்கள் அதிகமாகி விட்ட படியால் இந்த இரட்டை பயன்பாட்டு சூரிய ஒளி நிலவல்கள் என்ற கருத்து கவர்ச்சிகரமாகவும் தேவையாகவும் வரவேற்தக்கதாக அமைந்து விட்டது என்றால் மிகையல்ல.



"அக்ரிவோல்டாயிக்ஸ்" தொழில்நுட்பம்:-

பாரம்பரியமாக சூரிய ஒளி
டெவலப்பர்கள் சூரியஒளி


மின்சக்தி திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும்போது மேல்மண் அகற்றப்பட்டு பெருமளவு நிலத்தில் கான்கிரீட் அடிச்சுவடுகளில் பேனல்கள் பொருத்தப்படுகின்றன. இந்த வகையில் மின் உற்பத்தி அதிகமானாலும் விவசாய நிலத்தில் விவசாய பயன்பாட்டின் அளவை குறைக்கின்றன. இதனை தவிர்க்கும் வகையில் வயல்களில் நிறுவப்படும் சோலார் பேனல்கள் பூமிக்கு அருகில் நிறுவாமல் தரையிலிருந்து ஏழு அடி உயரத்தில் ஏற்றப்கின்றன மேலும் கான்கிரீட் தளவகள் அமைக்கப் படுவதில்லை. இதனால் விவசாய நிலத்திற்கோ அதன் விவசாய பயன்பாட்டிற்கோ இடையூறாக இருப்பதில்லை மேலும் அவை நெருக்கமாக இல்லாமல் 3 அடி இடைவெளியில் பிரிக்கப்படுகின்றன. இந்த இடங்கள் வழியாக ஒளி மற்றும் மழைநீர் நேரடியாக விழுந்து நிலத்தை வள மாக்குகின்றன.

இத்தகைய அசாதாரண இரட்டை பயன்பாட்டு சூரிய ஒளி மின் நிறுவலின் மூலம் பேனல்களின் அடியில் பல விதமான பயிர்களை வளர்ந்து விவசாய பயன்பாட்டில் நிலத்தை வைத்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும். அதேவேளையில் விவசாயிகள் தங்கள் வருமானத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பன்முகப் படுத்த உதவுகிறது.



இந்தியா 2022 - ஆம் ஆண்டளவில் பண்ணை வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறது. மற்றும் "அக்ரி போட்டோ ஓல்ட்டாயிக்ஸ்" அண்மையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா (REI) (Renewable Energy India) வர்த்தக கண்காட்சியில் சக்தி மற்றும் உணவுக்காக சூரியனை அறுவடை செய்தல் (Harvesting Sun For power & Food) என்ற தலைப்பில் ஒரு அமர்வு இந்த கருத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் சூரிய சக்தி நிறுவனமான "ஆஸ்ட்ரான் சோல் பவர்" (Astron Solpower) உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்க்கியில் 1000 மீ 2 திட்டத்தினை நிர்மாணித்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ஜெர்மனியின் ஃபிரான் ஹோஃபர் ஐ எஸ்இ ஆராய்ச்சி நிறுவனம். (Franhofer ISE Research Institute) மேற்கொண்ட ஆய்வின் முடிவுப்படி இத்தகைய இரட்டை பயன்பாட்டு தொழில் நுட்பத்தின் படி சூரிய ஒளி மின்சார உற்பத்தி மட்டுமல்லாமல் பயிர்கள் உற்பத்தியும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறது.

விவசாய பி.வி. பயன்பாட்டின் நன்மைகள் பயிர் விளைச்சலுக்கு அப்பால் காற்று மற்றும் மண் அரிப்பை தடுப்பது. கால் நடைகளுக்கு நிழல், மேம்பட்ட மகரந்த சேர்க்கை வாழ்விடங்கள் மற்றும் நிழல் -சகிட்புத்தன்மை கொண்ட பயிர்களுக்கான சந்தை வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.

இத்தகைய விவசாய நிலத்தில் இரட்டை பயன்பாடு இந்தியா முழுவதும் நடந்தால் மின்னாற்றல் உற்பத்தி 15 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும் மேலும் விவசாயிகள் பொருளாதாரமும் மேம்பாடு அடையும் என்பது திண்ணம்

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories