December 02, 2020

மொட்டைமாடி தாமரைத் தடாகம் (Terrace Lotus Pond)

கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டத்தில் வசிக்கும் 34 வயது திரு.எல்தோஸ்  பி.ராஜீ (Eldhose P. Raju) அரபு நாட்டு கத்தாரில் தொழிற்சாலை அவசரகால மருத்துவ செவிலியராக (Industrial Nurse) 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தன்னுடைய சொந்த மாவட்டமான எர்ணாகுளத்துக்கு சொந்த காரணங்களுக்காக திரும்பியவர் எதிர்பார்த்தபடி அவரது அனுபவப்பட்ட தொழிற்சாலை மருத்துவ செவிலியராக பணியமையவில்லை என்பதால் வேறு தொழில் அமைய நிர்பந்தம் ஏற்பட்டது.

தனது சிறுவயது விருப்பமாக இருந்த தாவரங்களை வளர்க்க திட்டமிட்டார். தனக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத தாமரைத் தடாகத்தினை விட்டு மொட்டை மாடியில் அமைத்து தாமரைகளை வளர்க்கத் துவங்கினார். ஆரம்பத்தில் செயல்முறை பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது தாமரை வணிகத்தின் மூலம் மாதம் ரூ 30,000 /- ஈட்டுவதாக கூறுகிறார். அவரது தேவைக்கான தாமரை நாற்றுகளை ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறார். அந்தவைகையில் 20க்கும்

மேற்ப்பட்ட வகை தாமரைகள் இவருடைய தடாகத்தில் வளர்த்து சந்தைப் படுத்தி வருகிறார். இதில் ஜீசுனயன் கயன் பேன் (Zhizun Quianban), மேக்னி பிஸன்ட் (Magnificent), சார்மிங் லிப்ஸ் (Charming Lips), டா சாவின் (Da Savin), மற்றும் ஃபயர் பவல் (Fire Bowl) வகைகளும் அடக்கம் வாடிக்கையாளர்கள் தாமரை மலராகவும், பயிர் செய்யும் செடியாகவும் பெறுகிறார்கள்.

சந்தைப்படுத்ததலை தகவல் தொழில்நுட்பம் மூலமாக ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக நடைமுறைப் படுத்தியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாமல் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, பூனே மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார் தற்சமயம் ஒரு தாமைரைத் செடி ரூ 850 -/- முதல் ரூ.3500 /- வரையில் விற்பனை செய்கிறார்.

தனக்குப் பிடித்தமான தாவரத் துறையிலேயே பணியினைச் செய்வதென்பது மனநிறைவைத் தருவதாக பெருமையுடன் கூறுகிறார் திரு. எல்தோஸ் பி.ராஜீ.

Contact: 8943911901

https://www.facebook.com/profile.php?id=100008551290991

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories