தமிழ்நாட்டின் தேனீ மாவட்டத்தில் உள்ள ஹனுமந்தன் பட்டியை பூர்வீகமாக கொண்ட பெங்களூருவில் உள்ள கட்டிடக்கலை கலைஞரான 29 வயதான திரு. பால சுந்த கௌசிகன் 2020 - ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் நட்பு கார்பன் தடயங்கள் குறைந்த, 3000 சதுர அடியில் விலை குறைந்த விலையில் கட்டியுள்ளார். அவருடைய இந்த வீடு பிரிட்டிஷ் இந்திய கட்டிடக்கலைஞர் (Indo - British Architect) திரு. லாரி பேக்கரால அறிமுகப்படுத்தப்பட்ட எலி - பொறி பிணைப்பு (Rat Trap Bond) முறையை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
வீட்டின் சிறப்புகள்:-
1. வீட்டில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிருந்து கட்டுமான பொருட்கள் வாங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
2. கிராமிய கலாச்சாரம், காலநிலை, புவியியல் மற்றும் பிராந்தியத்தின் நிலப்பரப்பு போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
3. எலி - பொறி பிணைப்பு கட்டுமான செங்கற்கள் செங்குத்து நிலையில் வைக்கப்பட்டு சுவரில் ஒரு குழியை உருவாக்கி அதன் மூலம் கற்களின் எண்ணிக்கை மற்றும் பூச்சுகள் குறைந்த அளவே பயன் படுத்தப்பட்டுள்ளது.
4. வீட்டின் அருகிலுள்ள கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட தோடல்லாமல் நாள் முழுவதும் வீட்டிற்குள் இயற்கையான வெளிச்சம் இருக்கும் வகையில் சூரிய ஒளி உள்ளே வரும் வகையில் வீட்டின் நடுவே சாளரம் (முற்றம்) அமைக்கப்பட்டுள்ளது.
5. வீடு கட்ட சுமை தாங்கும் தொழில்நுட்பம் (Load Bearing Technique) படுத்தப்பட்டதன் மூலம் வீடு கட்டும் செலவு குறைவாக உள்ளது.
6. பெரும்பாலான மின்சாரத் தேவைக்கு சூரிய ஒளி சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம் மாதாந்திர மின் பயன்பாட்டு செலவினை 70% வரையில் குறைக்கிறது.
7. இயற்கை வெளிச்சம் மற்றும் காற்றோட்ட பெற வீட்டின் நடுவில் ஒரு பெரிய குற்றம் அமைந்துள்ளது. குறுக்கு காற்றோட்டம் (Cross Ventilation) மற்றும் காற்று தேக்கு செயல்பாடு (Stock Effect) மூலம் வீடு எப்போதும் குளிர்ச்சியாக உள்ளது. குளிர்சாதனப் பெட்டி தேவை இல்லை!
8. கழிவு மேலாண்மைக்காக செப்டிக்டேங்க் பதிலாக பயோ டைஜஸ்டர் (Bio - Digestor) அமைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் மீத்தேன் வாயு அடுப்பெரிக்கவும் தண்ணீர் தோட்டத்திற்கும் சுழற்சி பயன்பாடுள்ளது.
9. சமையலறை கழிவுகளை நிர்வகிக்க 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோகேஸ் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
10. வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் மழைநீர்
ரீ சார்ஜ் (Rain water Recharge) 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
11. வீட்டின் தளம் கையில் சின்னாளபட்டியில் செய்யப்பட்ட ஆத்தங்குடி ஓடுகளை பயன்படுத்தப்பட்டுள்ளன.
12. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் பச்சை திட்டுக்கள் இருப்பதால் வீட்டிற்கு "ஹவுஸ் ஆஃப் கார்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
13. வழக்கமான முறைகளை பயன்படுத்தி கட்டுவதைவிட ஒட்டுமொத்த செலவு மிகவும் குறைவான 55 லட்சத்து 3000 சதுர அடி வீடு எட்டு மாதங்களில் கட்டப் பட்டுள்ளது என்பது சிறப்பு.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.