December 02, 2020

புதியவகை "சீத்தாபழம்" (New Custard Apple)

சீதாப்பழம் பொதுவாக பெரும்பாலும் விரும்பும் சுவை கொண்டது. ஆனால் அதிகப்படியான விதைகள் இருப்பதினால் வரவேற்பைத் தடுக்கிறது. இதற்கான ஒரு தீர்வாக புதிய வகை "சீதாப்பழம்" ஒரு விவசாயி கண்டுபிடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷோலாப்பூர் மாவட்டத்தில் கோர்மலே கிராமத்தைச் சேர்ந்த திரு. நவநாத் மல்ஹாரி கஸ் பதே (Mr.Navanath Malgari kaspate) பள்ளிப்படிப்போடு போடு நிறுத்திய ஒரு 64 வயது விவசாயி. தொடர்ந்த முயற்சியால் புதிய வகை சீதாப்பழ வகையினை கண்டுபிடித்துள்ளார். மிகச்சில விதைகளை மட்டுமே கொண்டுள்ள அதிகமான சதைப்பற்றுள்ள இவ்வகை சீதாப்பழம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. Nmk - 01 (Golden) என்று பெயரிடப்பட்டுள்ளது.



திரு.கஸ்பதே தனது 40 ஏக்கர் விவசாய நிலத்திற்கு "மது பன் பண்ணை மற்றும் நர்சரி" (Madhavan Farm and Nursery) என்ற பெயரில் 42 வகைக்கும் மேற்பட்ட சீத்தாப் பழ வகைகள் மற்றும் பல விதமான பயிர்களையும் வளர்த்து பராமரித்து வருகிறார். இவருடைய இந்த பண்ணை ஒரு வாழும் அருங்காட்சியகம் (Living Museum) என்றால் மிகையல்ல.

மதுபன் பண்ணையில் உள்ள சில சீத்தா பழ வகைகள்:

1. NMK - 01 (Golden)

2. அனோனா - 2 (Anona - 2)

3. NMK - 02

4. NMK - 03

5. அனோனா கிளப்ரா (Anona Glabra)

6. பின்க்ஸ் மேமோத் (Pinks Mammoth)

7. அனோனா மூரிக்கடா (Anona Muricata)

8. ஐசிகல் (Icecal)

9. வாஷிங்டன் ஜெம் (Washington Jem)

10. அனோனா மொன்டானா (Anona Montana)

11. ரெட்சீத்தாபழம்

12. பலானகரி(Balanagari)

13. புரந்தர் (Purandar)

மற்றும் பல

இவற்றில் மிகக்குறைந்த விதையும் அதிக சதைப்பற்றும் (Pulp) உள்ள Nmk -01 வகை ஒரு ஏக்கருக்கு 12 டன் பழங்கள் வரையில் அறுவடையாகிறது. இப்பழங்களில் சில 3/4 கிலோ எடையுள்ளது என்பது வியப்பூட்டுகிறது. இந்தியாவிலேயே "மதுபன் பண்ணை மற்றும் நர்சரி" மிகப் பெரியது. சீத்தாப்பழ நாற்றுகள் ஒன்று Rs 60 -/- ஆக விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார் திரு.கஸ்பதே

1.Protection of plant varieties and rights Authority" என்ற அமைப்பு 2016 - ஆம் ஆண்டு விருதினையும் பணப் பரிசாக ரூ 1 லட்சமும் அளித்து கவுரவப் படுத்தியுள்ளது.

2. அகமது நகரின் (AhmedNagar) Mahatma Phula Krishi Vidyapeeth என்ற அமைப்பு திரு.கஸ்பதே அவர்களின் 16 - சீத்தாப்பழ வகைகளை பரிசாகப் பெற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

திரு. நந்தலால் தகட் (Nandalal Dhakad) 45 வயதான விவசாயி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சிங்பூரா (Jaisinghapura) கிராமத்தைச் சேர்ந்தவர்.
மதுபன் பண்ணையின் சீத்தாப்பழ நாற்றுகளைப் பெற்று தனது விவசாய நிலத்தில் பயிரிட்டு வருடம் ரூ. 2 லட்சம் வருமானம் ஈட்டுவதாக பெருமையுடன் கூறுகிறார்.

திரு.கிரிராஜ் குப்தா (Giriraj Gupta) மத்திய பிரதேசத்தின் நர்சிங்கார் (Naraingarh) கிராமத்தைச் சேர்ந்த விவசாயி NMK - 01 சீத்தாப் பழ வகை வெறும் 10 விதைகள் மட்டும் உள்ள சராசரியாக 730 கிராம் எடை கொண்ட பழங்களாக அறுவடை செய்து நல்ல வருமானம் பெறுவதாக கூறுகிறார். மேலும் ஒரு சீந்தாப்பழ மரத்தில் 20 கிலோ பழம் அறுவடை செய்வதாகவும் 340 மரங்கள் மூலமாக வருடம் ரூ 12 லட்சம் ஈட்டுவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

சீதாப்பழத்தை பற்றிய ஒரு வரலாற்றுத் தகவல்:

சீதாப்பழம் தென்னமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளிலிருந்த (South America and West Indies) போர்த்துகீசியர்களால் (Portuguese) இந்தியாவிற்கு 16 - ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் புராதன இந்திய சிற்பங்கள் மற்றும் சிலைகளில் மகாராஷ்டிராவின் அஜந்தா குகை சிற்பங்கள், மத்திய பிரதேசத்தின் சாஞ்சி சிற்பங்கள், உத்தரப்பிரதேசத்தின் மதுரா சிற்பங்கள் கிறிஸ்துவத்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டிலேயே (2nd Century BC) இந்தியாவில் சீத்தாப்பழம் இருந்தது என்பதற்கான பதிவுகள் ஆச்சரியமான உண்மை.

Website:

https://madhuban-farm-nursery.business.site/

Call:

98814-26974

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories