November 21, 2021

நடமாடும் சோலார் பேனல் ("Mobile Solar Panel")

பூமியில் படிம எரிபொருள் (Fossil Fuel) குறைந்து கொண்டே வருவதாலும் அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மாற்று சக்தி தேடல் அதிகரித்து வருகிறது. அவற்றில் சூரிய ஒளி மற்றும் காற்று முக்கிய பங்கு வகிக்கிறது.

நகர்ப்புறங்களில் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் பொதுவான காட்சியாக உள்ளது இருப்பினும் கிராமப்புறங்களில் அன்றாட வேலைகளுக்கு மின்சாரம் தேவைப்படும் பல விவசாயிகள் அவற்றை நிறுவ தயங்குகின்றனர். காரணம் அவற்றை வயல்வெளிகளில் வைப்பது குற்றவாளிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இது சோலார் பேனல்கள் திருடப்படுவதற்கு அல்லது சேத மடைவதற்கு வழி வகுக்கிறது.



இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஹரியானா மாநிலம் ஹிசார் (Hissar) ல் உள்ள பெட்வார் கிராமத்தைச் சேர்ந்த 12 ம் வகுப்பு முடிந்த 35 வயது பிரதீப்குமார் (Mr. Pradeep Kumar) என்ற சோலார் பேனல் விற்பனை செய்யும் விவசாயி தொடர்ந்து முயற்சி செய்து “நடமாடும் சூரிய ஒளி மின்சார பேனல்" களை வடிவமைத்துள்ளார்.

2015- ஆண்டில் திரு.பிரதீப் குமார் தனது பகுதியில் உள்ள சில மெக்கானிக்குகளை அணுகி சோலார் பேனல்கள் சேதமடையாமல் இருப்பதற்கும் திருடப் படாமல் இருப்பதற்கும் யோசனைகளை பெற தொடங்கினார் சோலார் பேனல்களை வயலிலிருந்து விவசாயிகள் வீட்டிற்கு பாதுகாப்பு செய்ய முன்னும் பின்னுமாக நகர்த்துவது தான் ஒரே தீர்வு என்று கண்டறிந்தார். அதன்படி 2019 - அண்டில் "சோலார் ஆன் வீல்ஸ்" (Solar on Wheels) என்ற புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்துள்ளார்.

தேவைப்படும் அளவிற்கு பேனல்கள் ஒரு சக்கர டிராலியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிராலிகளை ஒரு டிராக்டரின் பின்னாலோ அல்லது டிராக்டர்களில் ஏற்றியோ வயல்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தலாம். பணி முடிந்தபின் மீண்டும் விவசாயிகளின் பாதுகாப்பான இல்லத்திற்கு கொண்டு செல்லலாம்.

இந்த சாதனங்கள் இரண்டு அளவுகளில் 2 HP மற்றும் 10 HP அளவுகளில் வருகின்றன பேனல்கள் டிராலியை டிராக்டரின் பின்புறத்தில் பொருத்தலாம். உறுதியான சக்கரங்கள் உள்ளதால் அவை சீரற்ற வயல் பரப்புகளின் மேல் செல்கின்றன.



தள்ளுவண்டி மின்சார பேனல்கள் மூலம் விவசாயிகள் எங்கும் மின்சார உற்பத்தி செய்வது மட்டுமின்றி கூடுதல் வருவாய் ஈட்டவும் வழிவகை செய்கிறது.

உத்திரப்பதேசத்தில் உள்ள பல விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரத்தை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாசனம் செய்வது மட்டுமின்றி கூடுதல் வருமானத்திற்காக கோதுமை, அரிசி மாவு அரைக்கும் தொழிலையும் செய்து வருகின்றனர்.

" சோலார் ஆன் வீலஸ்" என்ற இந்த புதிய கண்டுபிடிப்பு திரு. பிரதீப்குமார் அவர்களின்" TG சோலார் பம்ப்ஸ்" என்ற நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளின் தனிப் பயநாக்கத்தைப் பொருத்து சாதனங்களின் ஆரம்பவிலை ரூ 48,000 ஆகும். இதுவரையில் 2000 க்கும் மேற்பட்ட சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது திரு. பிரதீப் குமார் இருசக்கர வாகனங்கள் மூலம் இழுக்கக்கூடிய தள்ளு வண்டியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது டிராக்டர் இல்லாத விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

- DR. வி.எஸ்.பொய்யாமொழி (MVSc)

CONTACT US:
Bass Road, VPO Petwar, Distt. Hisar,
Haryana 125074.
Help line No: 7400007009.
Email: info@tgsolarpump.com
Email: tgsolarpump@gmail.com

Website: https://www.tgsolarpump.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories