January 08, 2021

கான்கிரீட் இல்லா கேரளா வீடு Concrete Free Kerala Home

திரு.பிஜு பாலன் (Mr.Biju Balan) 44 வயதான கட்டிடக்கலை வல்லுனர் (Architect) கேரள மாநிலத்தின் கோழிக் கோட்டில் உள்ள மலப்புரம்பா (Malaparamba) நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த (Eco - Friendly) காங்கிரீட் இல்லா வீட்டை தமது குடும்பத்திற்காக கட்டி 2013- லிருந்து குடியிருந்து வருகிறார். அவரது இயற்கை வீடு 1700 சதுர அடியில் அமைந்துள்ளது. தனது வீட்டிற்கு "தோட்டம்" என பொருள் தரும் வகையில் "சமன்" (Chaman) என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



"சமன்" (Chaman) வீட்டின் சிறப்புகள்:

- 1700 சதுர அடி நிலத்தில் 1,500 சதுர அடியில் "சமண்" வீடு கட்டப்பட்டுள்ளது.

- வீட்டின் நடுவில் 500 சதுர அடியில் திறந்தவெளி அமைப்பில் (Open - Roof Courtyard) பழமரங்கள் நடப்பட்டுள்ளன. இதில் மாமரம், சீத்தாப்பழம் மற்றும் சம்பா பழம் இதில் அடக்கம்.

- வீட்டுக்கு இரண்டு வாசல்கள் உள்ளன

- உணவலிருந்தும் மேஜைகள் (Dining Table) திறந்த வெளியின் நடுவில் அமைந்துள்ளது .

- படுக்கையறை, படிகள், அனைத்தும் மரத்தாலே அமைக்கப்பட்டுள்ளது.

- இரண்டு கார்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

- உயர்ந்த ஜன்னல்களும் (Windows) திறந்த வெளியும் வீட்டினுள் நுழைந்த வெளிச்சமும் காற்றோட்டமும் அளிக்கிறது.

- வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சிமெண்ட் பலகைகள் மற்றும் இயற்கை கற்கள் (Laterite Bricks) பயன்படுத்தப் பட்டுள்ளது. அனைத்தும் இயற்கை மண், மணல் மற்றும் முந்திரிமர கோந்து (Cashew Tree Gum) பயன் படுத்தப்பட்டுள்ளது.

- தரைகளுக்கு கோட்டா கற்கள் (Kotastone) டெர்ரகோட்டா டைல்ஸ் (Terracotta Tiles) பயன்படுத்தப்பட்டுள்ளது.

- வீட்டின் மரக்கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் இடிக்கப்பட்ட பழைய வீட்டிலிருந்து பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

- சுவர்கள் திற்கும் செயற்கை பெயிண்டுகள் (Artificial Paint) பயன்படுத்தாமல் இயற்கை சுண்ணாம்பு கலவை (Lime Paste) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

- ஒரு 40 அடி கிணறு அமைக்கப்பட்டு வலை கொண்டு மூடப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

- பழைய மரங்களை கொண்டுள்ள ஒரு எடை குறைந்த நாற்காலிக்கு கழிவு செய்யப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தின் கியர் சக்கரம் பொருத்தப்பட்டு இயங்கு நாற்காலியாக மாற்றப்பட்டுள்ளது.

- அறையின் அலமாறிகள் (Cupboard)  அனைத்தும் ரசாயனம் பயன்படுத்தாத ப்ளைஉட் (Plywood) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

- உணவு மேஜைகள் (Dining Table) மற்றும் மர நாற்காலிகள் அனைத்தும் தீக்குச்சிகள் தொழிற்சாலை கழிவு செய்த மரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

- வீடு கட்ட மொத்த செலவு ரூ 27 லட்சத்தில் அடங்கியதாக திரு.பிஜீ கூறுகிறார்.



தாய்மண்ணிற்கு பாதிப்பில்லாத தனது வீட்டை வடிவமைத்து கட்டியுள்ள கட்டிடக்கலை வல்லுனர் திரு. பிஜு பாலன் அவர்களுக்கு "இந்திய கட்டிடக்கலை மன்றம்"  "(The Indian Institute of Architecture (IIA) 2015 -ம் ஆண்டில் விருது வழங்கி கவுரவித்துள்ளது. 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories