குர்கான் (Gurgoan) - ல் உள்ள குரு கிராம நிறுவனம் (Gurugram Firms) டிடல் (Detel) என்ற மின்சார பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.யோகேஷ் பாட்டியா (Yogesh Batia) இதுவரையில் தொடுதல் இல்லாத வெப்பமானிகள் (Contact less Thermometers), சானிடைஸர்கள் (Sanitizers) ஆக்சிஜன் அளவிகள் (Oximeters) முகக் கவசங்கள் (Face masks) மற்றும் விலை மலிவான LCD டெலிஷன்கள் உட்பட பல பொருட்களை செய்து சந்தைபடுத்தியதுஉடன் தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான டிடல் (Detel) என்ற மலிவு விலை மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
" டிடல் பைக்" (Detel Bike) சிறப்புகள்:
1. 59 கிலோ எடை கொண்டது (மின்கல எடையும் சேர்த்து)
2. பொருட்களை எடுத்து செல்ல முன்னால் ஒரு கூடை உண்டு.
3. மின்சக்தி 250 வாட் மின்சார மோட்டாரில் இயங்குகிறது.
4. அதிகபட்சமாக 25 கீ.மீ வேகம் செல்லக்கூடியது.
5. 48 - வோல்ட் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
6. வீட்டு மின்சாரத்திலேயே 8 மணி நேரத்தில் பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
7. தொடர்ந்து 60 கீ.மீ. செல்லக்கூடியது.
8. பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டால் சைக்கிள் போல சுலபமாக பெடல் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
9. குறைந்த வேகம் செல்வதால் மிகவும் பாதுகாப்பானது.
10. பின் சீட் வசதியும் (Pillion Rider) செய்யப்பட்டுள்ளது.
11. பெட்ரோல் செலவு இல்லை
12. "டிடல் பைக்" விலை ரூ 19,999 - / -மட்டுமே தவணை முறையிலும் வழங்கப்படுவதால் குறைவான வாங்குதிறன் (affordability) உள்ளவர்களும் வாங்கமுடியும்.
தற்போது டெல்லி முதலமைச்சர் காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையிலும், வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையிலும் அறிவித்துள்ள மின்சார வாகன கொள்கை (Electric Vehicle Policy) ப்படி வாகன வரியோ, ஓட்டுனர் உரிமோ (Driving License) தேவைப்படாத மின்சார வாகனம். நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
காற்றுமாசு ஏற்ப் படுத்தாத புகையில்லா மின்சார வாகனங்கள் பெருமளவில் நிகழ்கால மற்றும் எதிர்கால தேவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.