January 28, 2022

மின்சார இரு சக்கர வாகனம் (120KM கி.மீ) (Electric Scooter – 120KM Mileage)

பூமியின் படிம எரிபொருள் வளம் படிப்படியாக குறைந்து வருவதாலும் அவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பலவிதமான மாற்று வழிகள் தொடர்பான தேடுதல்கள் அதிகரித்துள்ளன, அந்த வகையில் பகுதியான அல்லது முழுமையான மின்சாரம் பயன்படுத்தும் வாகனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன இதனால் எரிபொருள் செலவை நீண்டகால சேமிப்பு செய்யும் படிம எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும் உறுதி செய்கின்றது.



மின்சார வாகனங்கள் வழங்கும் நிறுவனங்கள் பல இருந்தாலும் ஹரியானா மாநிலத்தின் மாநகரில் உள்ள பென்லிங் இந்தியா எனர்ஜி & டெக்னாலஜி (Benling India Energy & Technology) தயாரித்து சந்தைப்படுத்தி உள்ள பென்ஸிங் ஆரா (Beling Aura), கிரித்தி (Kriti), ஃபால்கன் (Falcon) மற்றும் (Icon) ஆகிய இரு சக்கர மின்சார வாகனங்கள் பல சிறப்புகளை கொண்டுள்ளது.



1. ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிக்கான சர்வதேச மையம் (International Center For Automatic Technology (ICAT) அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளது.

2. சராசரி இந்திய நுகர்வோருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

3. 1200 W BLDC மின்சார மோட்டார் மற்றும் பிரிக்கக்கூடிய 72V/40 AH லித்தியம் அயான் பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 - 120 கி.மீ தூரம் 60 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.

4. பிரிக்கக்கூடிய பேட்டரியை வழக்கமான வீட்டுபவர் சாக்கெட் மூலம் 100% சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும்.

5. 95 கிலோ எடை கொண்ட இந்த வாகனம் 165 கி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கும்.

6. பென்லிங் ஆரா ஸ்காட்ர் ஆராவில் ரிமோட் கீ லெஸ் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

7.  வாகனதிருட்டு எதிர்ப்பு அலாரம், கூடுதல் சக்கர ஒருங்கிணைந்த பூட்டு மற்றும் USB மொபைல் சார்ஜிங் வசதி ஆகியவை உள்ளது.

8. வாகனத்தின் விலை
ரூ. 90000 -/- மட்டுமே

9. பென்லிங் ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பு அம்சம் "பிரேக் டவுன் ஸ்மார்ட் அசிஸ் டன்ஸ் சிஸ்டம்" (Breakdown Smart Assistance System BSAS) ஆகும் இந்த வசதி வாகனம் திடீரென செயலிழந்தாலும் வீட்டிற்கு வருவதை உறுதி செய்கிறது என்று பென்லிங் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. பரிதேஷ் டே (Mr.Paritosh Day) கூறுகிறார்.



10. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேலும் ஒரு அற்புதமான அம்சம் ஸ்மார்ட் பார்க்கிங் உதவி என்பது குறிப்பிடதக்கது.

உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகனச் சந்தையான சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

இருப்பினும் இந்திய அரசாங்கம் மின்சார வாகன பயன்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்க முடியும் உதாரணமாக சீனாவில் 3 லட்சம் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 150 நிலையங்களே உள்ளன வித்தியாசம் மிகப்பெரியது.

2019 - நிதியாண்டில் இந்தியாவில் மொத்த மின்சார வாகனங்கள் விற்பனை சுமார் 8 லட்சம். இதில் மின்சார இருசக்கர வாகனங்கள் சுமார் 1.5 லட்சம், மின்சார மூன்று சக்கர வாகனங்கள் சுமார் 6.5 லட்சம் மற்றும் மின்சார பயணிகள் வாகனங்கள் 4000 ஆகியவை அடங்கும்.

2025 - ஆம் ஆண்டுக்குள் மின்சாரவாகனச் சந்தை 20 மடங்கு விரிவடையும் என்று கணிக்கப்படுகிறது அதற்கான முயற்சிகள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்பதே நிதர்சனம். 

GO GREEN BIKES
No. 1431N, Sathy Rd, ganapathy, Gopalakrishannapuram, Bharati Nagar, Coimbatore-641006

 10:00 AM to 09:00 PM
Mail: gogreenbikescbe@gmail.com

Dharani E-Bikes
Kanishya Arcade, 3/GA, Warners Road, Cantonment Trichy, Pin Code 620001

 10:00 AM to 9:00 PM
Mail: saran939300@gmail.com

 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories