January 14, 2021

(CNG வண்டி) (கேஸ் வண்டி)

இந்தியாவின் தலைநகர் டெல்லியை சேர்ந்த திருமதி- ஜோதி (Mrs.Jyothi) தன்னுடைய கணவருடன் இணைந்து நடமாடும் வாகன உணவகத்தை "தோசா இன்க்" (Dosa INC) என்ற பெயரில் 2012-ம் ஆண்டிலிருந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

"தோசா இன்க்" (Dosa Inc) நிறுவனம் ஆரம்ப முதலீடாக (Initial Investment) ரூ.10,00,000 உடன் 2012 - ஆண்டு துவங்கியது. தற்போது வருடத்திற்கு 1.5 கோடி ரூபாய் ஈட்டுகிறது. இத்தனைக்கும் மற்ற நகரிலுள்ள மற்ற உணவகங்களை விட குறைந்த விலையிலேயே உணவுகள் வழங்கப்படுகின்றன என்பது நிதர்சன உண்மை.



இதற்காக திருமதி. ஜோதி தம்பதிகள் இயற்கை எரிவாயுவினால் இயங்கும் "டாடா ஏஸ்" (TATA - ACE) CNG RUN - ஜ தெரிவு செய்துள்ளது. இதனால் காற்று மாசு குறைக்கப்படுவது கூடுதல் நன்மை.இயற்கை எரிவாயு வாகனம் பயன்படுத்தப்படுவதால் "கிரீன் கட்டணம்" (Green Fee) ரூ 800/- கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



நடமாடும் வாகனஉணவகம் துவங்குவதற்கு முன்னால் என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்பதை திருமதி ஜோதி.விளக்குகிறார்:

- முதலில் சரியான வாகனத்தை தேவைக்குத் தகுந்தபடி தெரிவு செய்ய வேண்டும். புதிய வாகனமோ, பழைய வாகனமோ சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதாவது அதிக புகை உமிழும் வாகனமாக இருந்தால் கூடாது.

- உணவகம் நிறுத்தும் இடத்தினை தெரிவு செய்ய வேண்டும், முக்கியமாக குடியிருப்புப் பகுதிகளாகவும் வணிக வளாகங்கள் பொதுமக்கள் இயங்கும் பகுதியாகவும் இருத்தல் வேண்டும்.

- உணவு கட்டுப்பாட்டு துறைக்கு தேவையான
(FSSAI)

1. தொழில் நடத்துபவர் தகவல் எண்

(Employer Identification Number)

2. வியாபார அனுமதி

(Business License)

3. வாகன லைசன்ஸ்

4. விற்பனை அனுமதி

5. சுகாதாரத் துறை அனுமதி

(Health Department Permit)

6. தீயணைப்புத்துறை அனுமதி

(Fire Department Certificates)

7. சமையலைரை அனுமதி

(NOC for the kitchen)

8. வாகன அனுமதி மற்றும் தகுதி சான்று

(Vehicle Permits and Fitness)

9. GST விரி பதிவு

(GST Registration) விற்பனை ரூ 20 / - லட்சத்தை தாண்டினால் மிகவும் அவசியம்
இது தவிர வேலையாட்கள், மற்றும் அடிப்படை சமையலறை (Base Kitchen)
தனியான பேஸ் கிச்சனில் சட்னி வகைகள், சாம்பார் வகைகள் அனைத்தும் சமைத்து நடமாடும் வாகன உணவகத்திற்கு கொண்டு வந்துவிட வேண்டும்.
வாகன ஓட்டுனரே கேஷியராகவும் மிகச்சிலரே உணவு தயாரிப்பு மற்றும் உணவு பரிமாரு பவராக இருந்தல் செலவுகளை குறைக்க மிகவும் இன்றியமையாதது என்று கூறும் திருமதி. ஜோதி தற்சமயம் டில்லி, குருகிராம்
மற்றும் நோய்டா ஆகிய பகுதிகளில் நடமாடும் வாகன உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

Dosa Inc Foods Pvt. Ltd.
Delhi | Gurgaon
+91 9211188877
Info@Dosainc.In
Monday – Sunday 10 AM – 8 PM

CATERING QUERIES
+91 9971662239
Satya.Koniki@Dosainc.In

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories