May 29, 2022

ஒரு ஏக்கரில் தற்சார்பு வாழ்க்கை (1 Acre Model Farm)

பஞ்சாப் மாநிலத்தின் கெல் கிராமத்தில் தந்தை சரப்ஜித் பாகா மகன் அர்ஷ்திப் பாகா ஆகியோர் 2019-ஆம் ஆண்டிலிருந்து வாகா பண்ணைகளை நடத்தி வருகிறார்கள் இதில் ரசாயனங்களை சார்ந்து இருப்பதை குறைக்கவும் விளைச்சலை அதிகரிக்கவும் மற்ற விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டவும் உதவும் எளிய விவசாய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

“பாகா பண்ணை” அப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக செயல்படக்கூடிய நிலையான மற்றும் பல்லுயிர் கரிமப் பண்ணையாகவும் நவீன தொழில்நுட்பங்களின் கலவையுடன் இயற்கை விவசாயத்தின் பாரம்பரிய நடைமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த மாதிரியானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்தப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க ரசாயனங்களைப் பயன்படுத்துவது நிலத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அறிவு மற்றும் அனுபவமின்மை காரணமாக விவசாயிகள் தங்கள் நிலங்களை அழித்து நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிகமாக சுரண்டி நீர்மட்டம் குறைவதற்கு வழிவகுத்து உழைப்பால் நிறைந்த வளமான மண்ணில் வளர்ச்சி மற்றும் நல்ல விளைச்சலுக்கு அதிக அளவு வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் நிலையான நடைமுறைகள் மற்றும் நன்கு ஆய்வு செய்யப்படாத நிலைமைகளால் விவசாயிகளுக்கு ஒரு தீர்வாக பாகா பண்ணை அமைந்துள்ளது.



பாகா பண்ணையின் தீர்வானது 5 ஏக்கர் நிலத்தில் ஒரு கோதுமை அல்லது நெல் சாகுபடிக்கு மட்டுமே தங்களை மட்டுப்படுத்தவதற்கு பதிலாக ஒரு ஏக்கர் பரப்பளவில் வெவ்வேறு பயிர்களை பயிரிட்டு பன்முக படுத்தப்படுகிறது.

ஒரு ஏக்கர் பண்ணை கருத்தாக்கத்தின் மூலம் காய்கறிகள், மூலிகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் கோழியிலிருந்து முட்டைகளை உற்பத்தி செய்ய முடிகிறது. விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.

பஞ்சாப் மற்றும் பொதுவாக இந்தியாவில் விவசாய நிலம் சுருங்கி வரும் நிலையில் பாகா பண்ணை விவசாய முறை விவசாயிகளுக்கு மிகவும் சாத்தியமான மாதிரியாக உள்ளது என்பது நிதர்சனம். 

புத்தகத்தை கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்

https://amzn.to/3t37bMf

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories