January 10, 2021

குப்பையை 10நாளில் எருவாக்கும் இயந்திரத் தொகுப்பு (10 day Garbage composting Unit)

இந்தியாவில் ஆண்டுக்கு 62 மில்லியன் குப்பை சேகரமாகிறது. இதைக்குறைக்க குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே கம்போஸ்ட் உரமாக (treating garbage at source) மாற்றுவதுதான் சிறந்த தீர்வாக அமையும்.

மும்பையின், தானே மாவட்டத்தில் உள்ள பொறியாளர்கள் திரு.ருத்விக் பதம்கர் (Mr.Rutvic Pedamkar) மற்றும் திரு.சந்தீப் பாடில் (Mr.Sandip Patil) இருவரும் இணைந்து சூரிய ஒளி மின்சாரத்தில் (Solar Energy) இயங்கும்  விலை குறைந்த குப்பையை எருவாக உருவாக்கும் இயந்திரத்தை வடிவமைத்து உள்ளனர்.



வடிவமைத்த குப்பையை எருவாக்கும் சூரியசக்தி இயந்திர தொகுப்பினை (Solar Garbage Composting Unit) 2017- லிருந்து "கிளிம்ரஸ் சஸ்டெய்னபிள் சொல்யூஷன் பிரைவேட் லிமிட்டேட்  (Klimrus Sustainable Solution Private Limited) என்ற பதிவு பெற்ற நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்தி வருகின்றனர்.

ஏந்தித் தொகுப்பு செயலாற்றும் முறை:

மின்சாரம் மூலம் எருவாக்கும் இயந்திரம் மூலம் ஈரமான குப்பையை உலர வைப்பது, அரைப்பது, குளிர் வைப்பது என்ற மூன்று தத்துவத்தில் (Principles) செயலாற்றுகிறது.

1. ஈரமான குப்பையை காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகள், சமையலறைக் கழிவுகள் அனைத்தும் கொள்கலனில் இட்டவுடன் சிறிய துகள்களாக அரைக்கப்படுகின்றன.

2. தூகள்களாக அரைக்கப்பட்ட குப்பை 50 to 60 C வெப்பத்தில் இரண்டு நாட்கள் காய வைக்கப்படுகின்றன.

3. மூன்றாம் கட்டமாக அரைத்து காயவைக்கப்பட்ட கம்போஸ்ட் எருவை 7 நாட்களுக்கு குளிர்வைக்கப்பட்டு தோட்டத்தில் எருவாக இடப்படுகிறது.

அனைத்து செயல்பாடுகளும் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுகிறது.



சிறப்புகள்:

1. சுமார் 6:6 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது அனைத்து இயந்திர தொகுப்புகளும் இந்த இடத்தில் அடக்கம்.

2. ஒரு கிலோ குப்பை முதல் 500 கிலோ குப்பை களை எருவாக்கும் இயந்திரங்கள் தேவைக்கேற்ப பலவகையில் சந்தைப் படுத்தப்பட்டுள்ளது.

3. தீவிரமான பராமரிப்பு தேவையில்லை. ஒரு வராலேயே இயக்கத்தக்கது.

4. குறைந்த விலை. ஒரு குடும்பத்திற்கு தேவையான இயந்திரம் ரூ 8500 முதல் ரூ 12,500 - தேவைக்கேற்ப பெற்றுப் பயன்படுத்தலாம்.

5. அதிகபட்சமாக 10 நாட்களிலேயே கம்போஸ்ட் எருவை தயாரிக்க முடியும்.

6. சூரிய ஒளி மின்சாரம் என்பதால் தனியாக மின்சார செலவுகள் இல்லை.

இதுவரையில் 70 இயந்திரத் தொகுப்புகள் தனி வீடுகள், குடியிருப்பு சங்கங்கள், தங்கும் விடுதிகள் உணவகங்கள் எங்கள் மற்றும் கம்பெனிகல் செயல்பட்டு வருகின்றன.

Corporate Office
Klimrus Sustainable Solution, Atal Incubation Centre,2nd  Floor, SVKM’s Narsee Monjee Institute of Management Studies, V. L. Mehta Road, Vile Parle(W),
Mumbai – 400 056. India.

Factory Office
Arjun Sagar Complex, Near Telawane Tower, Station Road, Badlapur East Mumbai 421503

Contact info- 9930396032/ 8605639442

Website: www.klimrus.in

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories