உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான மாசாவிலுள்ள விவசாய தம்பதியினர் திரு. சபாபதி சுக்லா
ஷீக்லா திருமதி. சகுந்தலா தொடர்ந்து கரும்பு விவசாயத்தில் வருமானம் ஈட்ட முடியாமல் இருந்தனர். கடனில் தவித்த தம்பதியினர். நல் அதிர்ஷ்டமாக பாரம்பரிய முறையில் காடி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
காடி அல்லது வினிகர் (Vinegar) என்பது என்ன ?
காடி என்ற வினிகர் நொதித்தல் (Fermentation) மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அமில திரவம். வேதியல் பெயர் அசிட்டிக் ஆசிட் (Acetic Acid) காடி பாரம்பரிய இயற்கை முறையிலும் செயற்கை முறையிலும் தயார் செய்யலாம். திரு.சுக்லா தம்பதியினர் தாங்கள் பயிர் செய்யும் கரும்புச் சாறை பயன்படுத்தி இயற்கை முறையில் காடி உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர். காடி பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
- மருத்துவத்துறையில்
- உணவு தயாரிப்புத்துறையில்
- அழகு சாதன பொருட்கள்
- சுத்திகரிப்பு திரவங்கள்
- மாமிசத்தை மென்மையாக்க
- பூச்சித் தொல்லைகளை தவிர்க்க
- உடல் எடையை குறைக்க
- உணவில் உள்ள கொழுப்பை குறைத்து ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை சரியாக பராமரிக்க உதவுகிறது.
இன்ன பிற பயன்பாடுகளும் உள்ளன.
கரும்பு விற்பனையின் மூலம் சரியான வருமானம் இல்லாத நிலையில் திருமதி. சகுந்தலா அவர்களின் யோசனையின்படி கரும்பு சாறை பயன்படுத்தி இயற்கை முறையில் காடி தயாரித்து முதல் தொகுதி வினிகர் பைசாபாத்தில் உள்ள சிறிய கடையில் விற்கப்பட்டது. தேவை நன்றாக இருந்ததால் உற்பத்தி அதிகம் ஆக்கப்பட்டது. முதல் ஆண்டில் 40 லிட்டர் மட்டுமே விற்பனை ஆன நிலையில் அதிவேகமாக அதிகரித்து ஆயிரம் விட்டரும் மூன்றாம் ஆண்டில் 2000 லிட்டர் அளவையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் வினிகர் ரூ.40 / - க்கு மட்டுமே விற்கப்படுகிறது.
இன்று மச்சா கிராமத்தில் தயாரிக்கப்படும் இயற்கை வினிகர் உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப், வங்காளம், டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்படுகிறது. முதல் தொகுப்பின் விற்பனையில் ஈட்டிய ரூ 16,000 /- முதல் ரூ. 1.50 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவது வரையில் அவர் கிடைத்த அனைத்து வெற்றிகளுக்கும் மணைவி திருமதி. சகுந்தலா அவர்களின் யோசனை தான் காரணம் என்று நன்றியுடன் கூறுகிறார் திரு.சபாபதி சுக்லா.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெயிவருத்தக் கூலி தரும்"
என்பது மறை கூறும் உண்மை நிலை.
Call: 9793011034
9450997137
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.